Monday 28 February, 2011

My old posts - Check it out

ஆணிய புடுங்கியாச்சு !!!


அன்னிக்கு காலைல மிகவும் சோம்பலாக இருந்துச்சு . மழை காலம் வேற. படுகை விட்டு எழுதுக்க மனசு இல்லை. "வண்டி puncture பா . கொஞ்சம் போய் எனநு பாருபா " நு எங்க அப்பா சொன்னதும் என்னக்கு கடுப்பா ஆய்டுச்சு. ஆனா என்ன பண்ண தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை நு சின்ன வயசுல படிசிருகொம்ள அதுக்காக நு சொன்னா நம்பவா போறீங்க .நல்லா மெதிபாறு என்பது தான் உண்மை.
Okay எதை பன்னாலும் plan பன்னி பண்ணனும்நு என்னோட Bike எடுத்துகிட்டு Mechanic அஹ கூட்டிட்டு வர போனேன். அங்க எனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்துகிட்டு இருந்துச்சு . "நீயே போய் bike கொண்டு வந்துடுப்பா" நு சொன்னதும் வயதுக்குள்ள இடி மின்னல். எம்மா அவ்ளோ தூரம் எப்படி தள்ளிட்டு வரற்துநு யோச்சிகிடே நின்னேன். அப்போ அந்த Mechanic பாத்துட்டு "என்ன பா இன்னும் நிக்கற .. செரி முருகா இந்த அண்ணா கூட போயிடு வண்டி எடுத்துட்டு வா" நு அங்க இருந்த ரெண்டு பசங்கள்ள ஒருத்தன சொனதும் "shupppaaaa " நு நிமதி பெருமுச்சு விட்டுட்டு அந்த பைய்யன் கூட்டிட்டு வீட்டுக்கு வந்தேன் அந்த பையன் cycle pump வெச்சி காத்து அடிக்க ஆரம்பிச்சான். அப்போ light அ பேச்சு கொடுத்தேன். "என்னடா தம்பி படிக்கற" நு எதார்த்தமா கேட்டேன் . "அதெலாம் இல்ல sir".. "ஏன் பா தம்பி படிகல" நு கேட்டதுக்கு சொன்னான் பாருங்க பதில.."அதுக்கு எல்லாம் இஷ்டம் இல்ல Sir".. உடனே vivek படத்துல வர மாத்ரி நாமலும் இவன திருத்தி school கு போக சொல்லனும்னு idea வந்துச்சு.. "தம்பி இபோ கஷ்ட்ட பட்டா பிண்ணாடி சந்தோஷமா இருக்கலாம் பா .. இந்த காத்து அடிக்கற வேலைய விட படிப்பு எவளவோ easy பா.. நீ இப்போ நல்லா படிச்சா பிண்ணாடி உன்னோட குடும்பத்த காபாத்த முடியும்" நு வீர ஆவேசமா பேசி முடிச்சதும் அந்த பையன் "போலாமா Sir" நு கேட்டான் பாருங்க அப்போ பிரகாசமா எரிஞ்சிகிட்டு இருந்த bulb அ off பன்னிட்டு "போலாம் பா" நு main door அ open பண்ணேன்.."Sir, இப்போவே குடும்பத்த நான் தான் காபாத்தனும்.. நல்லா வேலை காத்துகிட்டு பெரியவன் ஆனதும் ஒரு கடை ஆரம்பிச்சிட்டா போதும் Sir" நு அவன் சொன்னத கேட்டதும் வேற வார்த்தையே வரல...


நான் எனோட bike ல slow வா போக அந்த பையன் கால்ல செருப்பு கூட இல்லாம அந்த வண்டிய தள்ளிக்கிட்டு வரர்த பாத்திட்டு கொஞ்சம் எனக்கே over அஹ இருந்துச்சு. வண்டிய ஓரம் நிறுத்திட்டு அந்த பையன் கிட்ட போய் "கொடுப்பா நான் தல்லிட்டு போறேன்" நு சொன்னேன்." விடுங்க Sir இதெலாம் ஒனும் இல்ல. நான் பாதுப்பேனு " தல்லிட்டு போனான் (என்னையும் bikeஐயும்).. செரி road ல எந்த பொன்னும் போகலைனு confirm பன்னிட்டு திரும்பவும் வண்டி ஒட்டிட்டு slow அஹ போனேன். Mechanic Shop கிட்ட வரும் போது அந்த பையன் கிட்ட போய் பத்து ரூபா note எடுத்து அவன் pocket ல வெச்சேன்.. "இல்ல sir வேணாம்.. அண்ணன் திட்டுவாரு".. "இருக்கட்டும் பா வெச்சிக்கோ" நு சொன்னது எனோட தர்ம சங்கடமான சூழ்நிலைல இருந்து light அஹ relief கெடசுது..

கடைக்கு போனதும் அந்த கடை owner "ஏண்டா இவ்ளோ நேரம்.." நு கேக்க அதுக்கு இந்த பயன் "இல்லனா வீடு கொஞ்சம் தூரம்" நு சொன்னதும் அந்த ஆளு என்னை பாத்து ஒரு rough look விட்டாரு.. ஓ இதுக்கும் சேத்து தான் bill போடறாரு போலன்னு அப்போ தான் strike ஆச்சு.."டேய்ய், நான் இந்த வண்டி trail பாக்க போறேன் அதுக்குள்ள வண்டிக்கு puncture போட்டுவைடா" நு அவரு கிளம்பிட்டாரு.."ஹ்ம்ம் இந்த பசங்க எபோ ஒட்டி நம்ம எப்போ ஓட்டி" நு நினச்சிக்கிட்டு பகத்துல இருந்த cycle ல ஒக்காந்தேன்..நம்ம வண்டிய கொண்டுவந்த பையன் சில பல tools அஹ கொண்டுவந்து back wheel அஹ கழட்ட ஆரம்பிச்சான்.. "டாய் இந்த வண்டி எல்லாம் உனக்கு கழட்ட தெரியாது, நீ போஓய் அந்த வண்டிக்கு காத்து அடி போ.." நு இனொரு பையன் வீரமா வந்தான்.."இல்ல எனால பண்ண முடியும்.. hero honda மாத்ரி தானே.. பண்ணிடலாம்" நு நம்ம பையன் சொல்ல அதுக்கு அவன் "அதான் சொல்றேன்ல போடா போய் காத்து அடி.. owner வந்தா spanner ல அடி வாங்க போற" நு சாதரணமா சொலிட்டு back wheel அஹ கழட்ட ஆரம்பிச்சான்.. நம்ம cycle சும்மா ஒகாந்த எப்படி.. நமக்கு பஞ்சாயதுனா  ரொம்ப பிடிக்குமே.. "அஹ்ஹ செரி செரி ஏம்பா சண்ட போட்டுக்கிரிங்க.. இந்த பையன் தான் பண்ணட்டுமே விடேன்.." நு ஒரு தீர்ப்பு சொனேன்.. "Sir, நீங்க இருங்க .. உங்களுக்கு ஒன்னும் தெரியாது... owner வந்தா இவனுக்கு தெரியாத வேளைக்கு விட்டுட்டேன்னு என்ன தான் திட்டுவாரு"..."அந்த owner வந்து சொனாலும் இவன் விட மாடன் sir" நு ஒரு குறல்.. யாருடா நு திரும்பி பாத்தா பாகத்து முடி வெட்ற கடைல இருந்து barber.."இது daily நடக்கறது தான்.. முருகன்ன எந்த வேலையும் செய்ய விடவே மாடன் இந்த பையன். எல்லாத்தையும் அவனே செய்வேன் நு எதையும் ஒழுங்கா செய்ய மாடன்".. நு சொனதும் நாம தீர்ப்புக்கு வேல வந்திடுச்சுன்னு நான் ஆரம்பிச்சேன்.."ஏன் பா இப்படி.. அவன செய்ய விட்டா தானே அவன் கத்துப்பான்.. எப்போ பாத்தாலும் நீயே பண்ணா எப்படி" நு சொல்லிடு முருகன பாத்தேன்.. திடிர்னு அங்க ஒரு பெரிய கண்ணாடி தெரிஞ்சுது.. உத்து பாத்தா அதுல நான் தெரிஞ்சேன் .. அமாம் முருகனோட எடத்துல நான் என்ன பாத்தேன்..

இந்த மாத்ரி தான் நானும் எனோட office ல புது விஷயத்த காத்துக எவளோ முட்டி மோதிநேன்னு ஞாபகம் வந்தது. நமக்குள்ள என்ன முயற்சி இருந்தாலும் நம்மல எதையும் செய்ய விடாம தடுக்க கண்டிப்பா நாலு பேரு இருபங்க.. அவங்கள மீறி.. அவங்க செய்யற வேலைய செய்ய கத்துகிட்டா தான் நாம பொழைக்க முடயும்னு நிலைமை எல்லா எடத்தலயும் இருக்கறத உணர்தேன்.. 'Resistance to learning' தான் மனசுல தோனுச்சு..நாம ரெண்டு அடி மேல ஏறினா நாலு அடி கீழ இழுக்க மக்கள் கண்டிப்பா இருபாங்க.. முருகனோட போராட்டம் நம்ம ஒவ்வொருத்தரோட போராட்டம்.. இதுல வெற்றி பெற்றவன் தான் வாழ்கைலயும் வெற்றி பெற முடியும்.. முருகன் கண்டிப்பா கடை போடுவான்னு நம்பிக்கை எனக்குள்ளேயும் துளிர் விட்டுச்சு.. "Sir puncture பாத்தாச்சு.. ஒரு சின்ன ஆணி இருந்துச்சு .. அத பிடிங்கியாச்சு" நு ஒரு குரல் என்ன நிகழ் உலகத்துக்கு கொண்டு வந்தது.

Sathya.S